மழையினால் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்து வருகின்றது. இந்நிலையில் பொன்னேரி அடுத்த விடதண்டலம் கிராமத்தில் முரளி – சுந்தரி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கணவன் – மனைவி மற்றும் குழந்தைகள் 2 பேரும் உணவு அருந்திக் கொண்டிருக்கும் போது இடி, மின்னலுடன் பெய்த மழையின் காரணமாக வீட்டின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்தது.
இதனால் அச்சம் அடைந்த 4 பேரும் வீட்டில் இருந்து வெளியே ஓடி வந்துள்ளனர். எனவே எந்தவித பாதிப்பும் இல்லாமல் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இதுகுறித்து அவர்கள் வருவாய் துறையினரிடம் புகார் கொடுத்துள்ளனர். அதன்படி வழக்கு பதிவு செய்த அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.