தூங்கிக்கொண்டிருந்த தொழிலாளி…. இரவில் நடந்த சம்பவம்…. வேலூரில் பரபரப்பு….!!!

வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டத்தில் உள்ள சேவூர் பகுதியில் தொழிலாளியான மீனாட்சிசுந்தரம் வசித்து வந்துள்ளார். இவருக்கு லாவண்யா என்ற மனைவியும், 2 பெண் குழந்தைகளும் உள்ளனர். இதில் லாவண்யா திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில்  மீனாட்சிசுந்தரம் மற்றும் அவரது தாய் ராமு அம்மாள் இருவரும் போட்டு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர். இதில் வீட்டின் மேற்கூரை மற்றும் சுவர் இடிந்து மீனாட்சி சுந்தரத்தின் மீது விழுந்துள்ளது. இதில் இடிபாடுகளுக்குள் சிக்கிய மீனாட்சிசுந்தரம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார்.

மேலும் அவரது தாய் சிறிய காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீனாட்சி சுந்தரத்தின் உடலை கைப்பற்றி உடற்கூறு பரிசோதனைக்காக அருகிலுள்ள வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *