மழையினால் வீடு இடிந்து விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் மாவட்டத்திலுள்ள தோகைமலை சுற்றியுள்ள கிராமங்களில் கடந்த சில மாதங்களாகவே தொடர்ந்து மழை பெய்து வருகின்றது. இதனால் வீடுகள் மற்றும் விவசாய நிலங்களில் தண்ணீர் தேங்கி நிற்கின்றது. இந்நிலையில் வடசேரி பகுதியில் உள்ள பெருமாள் என்பவரின் வீடு இடிந்து விழுந்தது. அப்போது வீட்டில் யாரும் இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.
இதைப்போல நீலாவதி என்பவரின் வீட்டின் சுவர்களும் இடிந்து விழுந்தது. இது குறித்து தகவல் அறிந்த ஊராட்சி மன்ற தலைவர், கிராம நிர்வாக அலுவலர் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சேதமடைந்த வீடுகளை பார்வையிட்டனர். அப்போது பாதிக்கப்பட்டவர்கள் அதிகாரிகளிடம் எங்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.