வெளுத்து வாங்கிய கனமழை…. இடிந்து தரைமட்டமான தொகுப்பு வீடு…. திண்டுக்கல்லில் பரபரப்பு….!!!

தொடர் மழையின் காரணமாக தொகுப்பு வீடு இடிந்து விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள வேடசந்தூர் பகுதியில் ஆதிதிராவிடர் காலனியில் 40 ஆண்டுகள் பழமை வாய்ந்த தொகுப்பு வீடுகள் அமைந்துள்ளன. அதில் ஒரு வீட்டில் முத்தம்மாள், காளியம்மாள், ஹேமலதா ஆகிய 3 பேர் வசித்து வருகின்றனர். அப்பகுதியில் பெய்து வந்த தொடர் மழை காரணமாக முத்தம்மாள் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்தது. இந்நிலையில் ஹேமலதா, முத்தம்மாள், காளியம்மாள் ஆகிய 3 பேரும் வெளியில் நின்று பேசிக்கொண்டிருந்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

ஆனால் வீட்டிற்குள் இருந்த பாத்திரங்கள், துணிகள், காஸ் சிலிண்டர், கட்டில் உள்ளிட்டவை அனைத்துப் பொருள்களும் இடிபாடுகளுக்குள் சிக்கின. இதுகுறித்து தகவலறிந்த ஊராட்சி மன்ற தலைவர் கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவர்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்க ஏற்பாடு செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *