பணம் கேட்டு தொந்தரவு செய்த தொழிலாளி…. திடீரென எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

ஹோட்டல் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மூலைக்கரைப்பட்டி பகுதியில் சின்னத்துரை என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஹோட்டலில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு ரஞ்சிதகனி என்ற மனைவி உள்ளார். கடந்த 5 ஆண்டுகளாக கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இதனால் சின்னத்துரை தனது தந்தையுடன் வசித்து வந்துள்ளார். அவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்து வந்துள்ளது.

இதனால் சின்னத்துரை தினமும் வீட்டிற்கு மது அருந்திவிட்டு பணம் கேட்டு தொந்தரவு செய்து வந்துள்ளார். இந்நிலையில் சின்ன மூலக்கரைப்பட்டி பகுதியில் உள்ள கோவில் அருகில் உள்ள மரத்தில் சின்னத்துரை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனைப் பார்த்த அருகில் இருந்தவர்கள் இதுகுறித்து மூலக்கரைப்பட்டி காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் சின்னத்துரையின் உடலை உடனடியாக மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *