வெந்நீரால் ஏற்படும் நன்மைகள்
நம் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புக்கள் கரைந்து இரத்த குழாய்கள் விரிவடைந்து உடலில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவி புரிகிறது.
ஆஸ்துமா போன்ற உபாதைகள் இருப்பவர்கள் தாகம் எடுக்கும் போதெல்லாம் கண்டிப்பாக வெதுவெதுப்பான வெந்நீர் குடிப்பது அவசியம்.
எண்ணெய் பலகாரம் சாப்பிட்ட பின்னர் நெஞ்சு எரிச்சல் இருந்தால் ஒரு டம்ளர் வெந்நீர் மெதுவாக குடித்து பாருங்கள் கொஞ்ச நேரத்தில் நெஞ்சு எரிச்சல் சரியாகிவிடும்.
உடல் வலி உள்ளவர்கள் நன்றாக வெந்நீரில் குளித்து விட்டு சுக்கு கலந்த வெந்நீரை குடித்துவிட்டுப் படுத்தால் நன்றாகத் தூக்கம் வருவதோடு வலியும் பறந்துவிடும்.
வெந்நீரில் சிறிது டெட்டோல் ஊற்றி அதில் கால்களை வைத்தால் கால் வலி பறந்துவிடும் அதோடு கால் சுத்தமாகிவிடும்.
மாதவிடாய் காலங்களில் பெண்கள் பெரிதும் வலியால் அவதிப்படுவார்கள் அந்த சமயத்தில் சூடான நீரை அடிக்கடி குடித்து வந்தால் மாதவிடாயினால் ஏற்படும் வலி குறையும்.
சாப்பிடுவதற்கு அரை மணி நேரம் முன்பு ஒரு டம்ளர் வெந்நீர் குடித்து வந்தால் உடல் எடை வேகமாக குறைய ஆரம்பிக்கும்.