“குதிரை பேரம்”கர்நாடகா,கோவாவை தொடர்ந்து மே.வங்கத்திலும் பாஜக சீட்டிங்… மம்தா பேனர்ஜி குற்றசாட்டு…!!

கர்நாடகாவை போல் மேற்கு வங்கத்திலும் குதிரை பேரம் பேசி எம்.எல்.ஏக்களை  பாஜகவில் இணைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார். 

மேற்கு வங்கத்தில் தியாகிகள் தினத்தை முன்னிட்டு கொல்கத்தாவில் நடைபெற்ற பொது கூட்டத்தில் பேசிய அவர், கர்நாடகாவில் நடப்பதை போல் மேற்கு வங்கத்திலும் பாஜக குதிரை பேரத்தில் ஈடுபடுவதாக குற்றம் சாட்டினார். சாரதா சீட்டு நிறுவனம் முறைகேட்டை தொடர்புபடுத்தி சிறையில் தள்ளிவிடுவதாக தங்களது கட்சி  பிரதிநிதிகளை மத்திய விசாரணை அமைப்புகள் மூலம் பாஜக மிரட்டுவதாக மம்தா பானர்ஜி புகார் கூறினார்.

Image result for mamta banerjee

மேலும் பாஜகவில் சேர்ந்தால் 2 கோடி ரூபாய் பணம் மற்றும் முக்கிய பதவிகள் கட்சிகளில் அளிக்கப்படும் என்று தங்கள் எம்எல்ஏக்களிடம் பேரம் பேசி பாஜகவிற்கு இழுக்க பார்ப்பதாக மம்தா பானர்ஜி தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், பாஜக நேர் வழியில் ஆட்சி அமைப்பதை விட்டுவிட்டு இது போன்ற ஜனநாயக விரோத செயல்களில் ஈடுபடுவதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் போராட்டம்  நடத்தி வருவதை சுட்டிக்காட்டியும் பேசினார். இதையடுத்து பாஜகவால் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் கறுப்புப் பணத்தை மீட்க வலியுறுத்தி வரும் 26ம் தேதி மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என மம்தா பானர்ஜி தெரிவித்தார்.