புதுப்பொலிவுடன் வருகிறது ஹோண்டாவின் எக்ஸ் பிளேடு…!!

ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் எக்ஸ் பிளேடு  மோட்டார்சைக்கிளின் ஃபேஸ்லிஃப்ட் மாடலை இந்தியாவில் அறிமுகப்படுத்தவுள்ளது.

Image result for ஹோன்டா எக்ஸ் பிளேடு

ஆனால் மோட்டார்சைக்கிளின் தோற்றம் மற்றும் மெக்கானிக்கல் அம்சங்களில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளவில்லை. அந்த வகையில் தற்போதைய மாடலில் உள்ளதை போன்று, இந்த மாடலிலும் 162 CC  சிங்கிள் சிலிண்டர் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 14 P.H.P பவர், 13.9 என்.எம் டார்க் செயல்திறன் மற்றும் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்டிருக்கும். இந்த மோட்டார்சைக்கிளில் முன்புறமும், பின்புறமும் டிஸ்க் பிரேக் வழங்கப்படும். ஹோண்டா எக்ஸ் பிளேடு விலையிலும் எவ்வித மாற்றமும் இல்லாமல் ரூ.81,668 (எக்ஸ்-ஷோரூம்) விலையில் விற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.