பாய் வீட்டு மட்டன் குருமா

தேவையான பொருட்கள்:

மட்டன் ,பெரிய வெங்காயம் ,சிறிய வெங்காயம் ,இஞ்சி, பூண்டு ,எண்ணெய் ,தயிர், உப்பு ,மஞ்சள் பொடி, கார மசால் பொடி, மிளகாய் பொடி ,மல்லி பொடி ,முந்திரி, கசகசா.

செய்முறை:

முதலில் ஒரு பாத்திரத்தில்தயிரில் மஞ்சள் பொடி, மிளகாய் பொடி, மல்லி பொடி ,தேவையான அளவு சேர்த்து கிளற வேண்டும். அதை தனியாக எடுத்து வைக்க வேண்டும் .பின் வெங்காயம் ,வெள்ளைப் பூண்டு ,இஞ்சி ,கசகசா, முந்திரி எல்லாவற்றையும் அரைக்க வேண்டும். ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி, பட்டை ,கிராம்பு சேர்க்க வேண்டும்.

பின் பெரிய வெங்காயம் சேர்த்து வதக்க வேண்டும். நன்றாக வதக்க வேண்டும். பின் அரைத்து வைத்ததை சேர்த்துக் கிளற வேண்டும் .அதன் பின் மட்டன் சேர்க்க வேண்டும். மட்டன் அரை மணி நேரம் வேக வேண்டும் .பின் மசால் கலந்த தயிரை சேர்க்க வேண்டும். தேவையான அளவு உப்பு சேர்க்க வேண்டும். பின் காரம் மசாலா சேர்க்க வேண்டும். பின் தேவையான அளவு நீர் சேர்த்து வேண்டும். ஆறு நிமிடம் வரை வேக வைக்க வேண்டும். சுவையான மட்டன் குருமா தயார்.