” எனக்கு பணம் வரவில்லை” ஆன்-லைனில் வாடகைக்கு ஆள் தேடிய வாலிபர்…. 1 லட்சம் ஏமாற்றிய நபருக்கு வலைவீச்சு….!!!

வீட்டிற்கு வாடகைக்கு வருவதாக கூறி மர்ம நபர் ஒரு லட்சம் வரை ஏமாற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வேலூரில் வசித்து வரும் 25 வயதுடைய வாலிபர் ஒருவர் தனக்கு சொந்தமான வீட்டை வாடகைக்கு விடுவதாக ஆன்லைன் மூலம் விளம்பரம் செய்திருந்ததால் செல்போன் எண், வீட்டின் படங்கள் போன்றவற்றை வெளியிட்டிருந்தார். இதனை ஆன்லைனில் பார்த்த மர்ம நபர் ஒருவர் வாலிபரை தொடர்புகொண்டு தான் மத்திய தொழில் பாதுகாப்பு படையில் அலுவலராக பணியாற்றி வருவதாக கூறினார். மேலும் தனக்கு வீடு வாடகைக்கு தேவைப்படுகிறது எனவும், இந்த இடம் எனக்கு மிகவும் பிடித்துள்ளதாக கூறியுள்ளார்.

எனவே அந்த வாலிபர் விவரங்களை  தெரிவித்த போது அந்த மர்ம நபர் தன்னுடைய செல்போன் எண் உள்ள வங்கி கணக்கில் 1 ரூபாய் செலுத்தினால் நான் அட்வான்ஸ் பணத்தை தருகிறேன் என்று கூறினார். அதன்படி வாலிபரும் அவரது செல்போன் எண் கணக்கிற்கு 1 ரூபாய் போட்டுள்ளார். பின்னர் அந்த மர்ம நபர் 1 ரூபாயை வாலிபர் வங்கி கணக்கிற்கு திருப்பி அனுப்பி வைத்துள்ளார். மீண்டும் வாலிபரை தொடர்பு கொண்ட மர்மநபர் எனது வங்கி கணக்கில் கோளாறு உள்ளதால் நீங்கள் ரூ 50 ஆயிரம் போடுங்கள் நான் திருப்பி அனுப்பி விடுகிறேன் என்று கூறினார்.

இதனை நம்பிய வாலிபர் மர்ம நபர் அளித்த செல்போன் எண்ணிற்கு ரூ 50 ஆயிரம் செலுத்தினார். பின்னர் மர்ம நபர் வாலிபரை தொடர்பு கொண்டு நீங்கள் அனுப்பிய பணம் எனக்கு வரவில்லை. எனவே மீண்டும் 49 ஆயிரத்து 999 ரூபாய் எனது வங்கிக் கணக்கிற்கு அனுப்பி வையுங்கள் என்று கூறியதால் மீண்டும் பணம் அனுப்பி வைத்துள்ளார். மேலும் வாலிபர் தொடர்பு கொண்டு பணம் பற்றி கேட்ட போது அந்த மர்ம நபர் எனது வங்கி கணக்கிற்கு பணம் வரவே இல்லை என்று கூறிவிட்டு போனை கட் செய்துவிட்டார்.

அப்போதுதான் அந்த வாலிபருக்கு தான் 1 லட்சம் ரூபாயை இழந்தது தெரியவந்தது. இதுகுறித்து வாலிபர் மாவட்ட சைபர் கிரைம் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சம்பந்தப்பட்ட செல்போன் எண் மூலம் மர்ம நபர் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *