“புனித ஹஜ் பயணம்” உலகம் முழுவதும் “18,00,000 பேர்” மெக்காவில் குவிந்தனர்..!!

உலகம் முழுவதும் இருந்து 18,00,000- த்துக்கும் அதிகமானோர் மெக்காவில் குவிந்துள்ளனர். 

சவூதி அரேபியாவின்  மெக்காவில் உள்ள காபா என்ற இடத்திற்கு உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் பக்ரீத் பண்டிகைக்காக ஆண்டு தோறும் புனித ஹஜ் பயணம் மேற்கொள்வது வழக்கம். அதன்படி நடப்பாண்டு ஹஜ் பயணத்திற்கு  உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள்  லட்சக்கணக்கானோர் சவுதிக்கு வந்து குவிந்த வண்ணம் உள்ளனர்.

Image result for Holy Hajj Yatra

இந்நிலையில் இதுபற்றி சவுதியின் கடவுச்சீட்டு இயக்குநரகத்தின் ஜெனரல் சுலைமான் பின் அப்துல் அஜிஸ் எஹியா (General Suleiman bin Abdul Azizi Al-Yehya) கூறும்போது, நடப்பாண்டு ஹஜ் பயணத்திற்காக 18,00,000- த்துக்கும் அதிகமானோர் இங்கு வந்துள்ளதாகத் தெரிவித்தார். மேலும் எந்த வித அசம்பாவிதங்களும் ஏற்படாத வகையில் அதனை  தடுப்பதற்காக ஆயிரக்கணக்கான போலீசார் மற்றும் ராணுவத்தினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *