நீலகிரியில் நீடிக்கும் கனமழையால் பள்ளிகளுக்கு விடுமுறை… மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு..!!

கனமழை காரணாமாக நீலகிரியில் உள்ள மூன்று தாலுகா பள்ளிகளுக்கு  மாவட்ட ஆட்சியர் விடுமுறை அளிக்க உத்தரவிட்டுள்ளார்.  

தமிழகத்தில் பெரும்பான்மையான இடங்களில் கன மழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தத நிலையில், நீலகிரி மாவட்டத்தில் தொடர் கனமழை நீடித்து வருகிறது. இதனால் அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அப்பகுதிகளில் பெய்த மழையால் ரோடுகளில் தண்ணீர் வெள்ளப்பெருக்காக  ஓடி காட்சி அளித்து வருகிறது.

Image result for கனமழையால் பள்ளிகளுக்கு விடுமுறை

இதனால் பள்ளி கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு நீலகிரி மாவட்ட ஆட்சியர் அம்மாவட்டத்தில் உள்ள 3 தாலுகாவின் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளார். அதன்படி கூடலூர், குந்தா, பந்தலூர் ஆகிய மூன்று தாலுகாக்களின் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.