BREAKING : புதுச்சேரியில் பள்ளிகளுக்கு விடுமுறை ….!!

புதுச்சேரியில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து அமைச்சர் கமலக்கண்ணன் உத்தரவிட்டு இருக்கின்றார்.

கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில் நாளை முதல் 31ஆம் தேதி வரை 5ஆம் வகுப்பு வரை விடுமுறை என்று அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து தற்போது புதுச்சேரியிலும் நாளை முதல் 5ஆம் வகுப்பு வரை விடுமுறை என்று கல்வித்துறை அமைச்சர் கமலக்கண்ணன் அறிவித்துள்ளார்.

மேலும் இத்தனை நாள் தான் விடுமுறை என்று சொல்லாமல் மறு அறிவிப்பு வரும் வரை இந்த விடுமுறை தொடரும் என்று தெரிவித்துள்ளார். புதுச்சேரி மாநிலம் முழுவதும் உஷார்படுத்தப்பட்டு இருந்தன.

புதுச்சேரி மாநிலத்தில் அனைத்து எல்லை பகுதிகளும் சுகாதாரத்துறை அதிகாரிகள் சோதனைளை தீவிரப்பட்டு மக்கள் எந்த பகுதியும் கூட கூடாது என்று புதுச்சேரி அரசால் அறிவிக்கப்பட்டு இருந்ததால் அங்குள்ள சுற்றுலாத்தலங்கள் முழுவதும் வெறிச்சோடி கிடக்கின்றன.