பொள்ளாச்சியில் விடுமுறை……. விஸ்வருபம் எடுக்கும் மாணவர்கள் போராட்டம்…!!

பொள்ளாட்சியில் இரண்டாவது நாளாக கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

பொள்ளாச்சியில் பாலியல் கும்பல் நடத்திய அட்டூழியம் கடந்த மாதம்  ஒரு பெண்  கொடுத்த புகாரில் தான் வெளிவந்தது . பாதிக்கப்பட்ட பெண் அந்த கும்பலிடம் முழுமையாக சிக்குவதற்கு  முன்பாக தனது வீட்டிற்கு வந்து இது தொடர்பாக பெற்றோரிடம் தெரிவித்து காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்டவரிடம் நடத்திய விசாரணையில் 4 பேர் கொண்ட  பாலியல் கும்பல் சிக்கியது. இவர்கள் வெளியிட்ட வீடியோ தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் , கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது . இவர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது .

Image may contain: 10 people, crowd and outdoor

இந்த கொடூர குற்றச்செயல்கள் மீது கடுமையான தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்று கூறி தமிழகம் முழுவதும் கல்லூரி மாணவர்கள் , பல்வேறு அமைப்புகள் போராட்டம் நடத்தினர் . தற்போது இந்த வழக்கு C.B.I வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது . ஆனாலும் மக்களும் , மாணவர்களும் திரளாக கலந்துகொண்டு தன்னெழுச்சி போராட்டம் நடத்தி வருகின்றனர் . தொடர்ந்து இரண்டு நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் மாணவர்கள் நடத்திய போராட்டத்தால் இந்த சம்பவம் நாளுக்கு நாள் விஸ்வரூபம் எடுத்து வருகின்றது . இந்நிலையில் இன்று பொள்ளாசியில் கால்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது . ஏற்கனவே நேற்று விடுமுறை விடப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது .