HIV ரத்தம் செலுத்தப்பட்ட கர்ப்பிணிப்பெண் பெற்றெடுத்த குழந்தைக்கு HIV தொற்று இல்லை..

சில மாதங்களுக்கு முன் எச் ஐ வி ரத்தம் இயற்றப்பட்ட கர்ப்பிணிப்பெண் தற்போது குழந்தை பெற்றுள்ளார் அந்த குழந்தை hi செய்தியால் உள்ளதா என்று மருத்துவர்கள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்

சில மாதங்களுக்கு முன்பு HIV யால்  பாதிக்கப்பட்ட ஒரு நபரின் ரத்தம்  சாத்தூரை சேர்ந்த  கர்ப்பிணிப் பெண் ஒருவருக்கு மருத்துவ பணியாளர்களின் அலட்சியத்தால் ஏற்றப்பட்டது இதனை அடுத்து தவறு செய்த பணியாளர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு மேலும் பாதிக்கப்பட்ட கணவன் மனைவி இருவருக்குமே அரசு சார்பில் அரசு வேலை ஆனது வழங்கப்பட்டது இதனை அடுத்து சிகிச்சைக்கான அனைத்து வசதிகளையும் அரசே தற்போது மேற்கொண்டு வருகிறது

Image concept with the result of the HIV test.

இதனை அடுத்து,எச்ஐவி தொற்று ரத்தம் ஏற்றப்பட்டதால் பாதிக்கப்பட்ட சாத்தூரைச் சேர்ந்த கர்ப்பிணிக்கு குழந்தை பிறந்துள்ளது இந்நிலையில்  பிறந்த குழந்தைக்கு எச்ஐவி பாதிப்பு இல்லை என முதல் கட்ட சோதனையில் தெரிய வந்துள்ளது ,மேலும் கர்ப்பிணி பெண் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வந்தது  இந்நிலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த பெண்ணுக்கு கடந்த ஜனவரி மாதம் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்து 45 நாட்களுக்கு பின்னர் ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு எச்ஐவி தொற்று உள்ளதா  என  சோதனைக்கு அனுப்பப்பட்டது

முதற்கட்ட பரிசோதனை முடிவில் குழந்தைக்கு hiv தொற்று இல்லை என அறிக்கை வந்துள்ளது என்று மருத்துவமனை தரப்பில் தெரிவித்துள்ளதாக குழந்தையின் தந்தை தெரிவித்திருக்கிறார் இரண்டாவது பரிசோதனை 6 மாதத்திலும் மூன்றாவது பரிசோதனை ஒன்றரை வயதில் எடுக்கப்படும் எனவும் அதன் பின்பே எச்ஐவி தோற்று முற்றிலும் இல்லை என உறுதி செய்யபடும்  என்றும்   தந்தை கூறியுள்ளார்