தங்கப்பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றார் சிந்து என்று ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.
உலக சாம்பியன்ஷிப்ஸ் பேட்மிண்டன் தொடர் போட்டி சுவிட்சர்லாந்தில் நடைபெற்று வருகின்றது. நேற்று பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு போட்டியின் இறுதிப் போட்டியில் இந்தியாவின் முன்னணி வீராங்கனையான பி.வி சிந்து ஜப்பானைச் சேர்ந்த நசோமி ஒகுஹாராவை எதிர்கொண்டு 21 – 7 , 21 – 7 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று முதல்முறையாக சாம்பியன் பட்டம் வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளார்.

இதையடுத்து தங்கம் வென்ற வீராங்கனை பி.வி சிந்து_க்கு பல்வேறு தரப்பினர்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். அதில் வரலாற்று வெற்றி! வாழ்த்துக்கள். பிவி சிந்து “உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்பில் தங்கப்பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றார். தொடக்கத்திலிருந்தே ஆதிக்கம் செலுத்திய சிந்து இறுதியில் ஒரு சம்பியனை போல விளையாடி உண்மையான சாம்பியனாகவே பட்டத்தை வென்றார்” என்று பதிவிட்டுள்ளார்.
Historical Victory! Congratulations @Pvsindhu1 for becoming the first Indian to win the gold medal at #BWFWorldChampionships. Dominated right from the start and finished like a true champion. ??
— YS Jagan Mohan Reddy (@ysjagan) August 25, 2019