இந்தியாவிலேயே முதல் முறையாக இசைத்துறையில் டாக்டர் பட்டம் பெற்ற ஹிப் ஹாப் ஆதி தமிழா…. குவியும் வாழ்த்து…!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான இசையமைப்பாளராக வலம் வருபவர் ஹிப்ஹாப் ஆதி தமிழா. சுந்தர் சி இயக்கிய ஆம்பள என்ற திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான ஹிப் ஹாப் ஆதி தனி ஒருவன், அரண்மனை 2, கத்தி சண்டை போன்ற பல படங்களுக்கு இசையமைத்துள்ளார். அதன் பிறகு மீசைய முறுக்கு என்ற திரைப்படத்தை அவரே இயக்கி நடிகராக அறிமுகமானார். இந்த படத்தை தொடர்ந்து பல படங்களில் நடித்துவரும் ஹிப்பாப் ஆதி தற்போது இசைத்துறையில் தற்போது டாக்டர் பட்டம் முடித்துள்ளதாக அறிவித்துள்ளார்.

கடந்த 6 வருடங்களாக கடுமையாக படித்து இசைத்துறையில் டாக்டர் பட்டம் பெற்றுள்ளதாகவும், இந்தியாவிலேயே முதல்முறையாக நான் தான் இசைத்துறையில் டாக்டர் பட்டம் பெற்றுள்ளேன் என்றும் ஹிப்ஹாப் ஆதி தமிழா கூறியுள்ளார். மேலும் இந்தியாவில் முதன்முறையாக இசைத்துறையில் டாக்டர் பட்டத்தை பெற்ற ஹிப் ஹாப் ஆதி தமிழாவுக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.