இந்தியில் ரீமேக்காகும் “லவ் டுடே”… ஹீரோ-ஹீரோயினி யார் தெரியுமா?…. வெளியான அப்டேட்….!!!!!

பிரதீப் ரங்கநாதன் இயக்கி, நடித்து கடந்த வருடம் வெளியாகிய படம் “லவ் டுடே”. இந்த படத்தில் பிரதீப் ரங்கநாதனுடன் இணைந்து இவானா, சத்யராஜ், ராதிகா, யோகிபாபு உட்பட பல நட்சத்திரங்கள் நடித்து இருந்தனர். மிகப்பெரிய வெற்றியடைந்த இந்த படம் வசூலில் பல கோடி லாபத்தை தயாரிப்பாளருக்கு அள்ளிக் கொடுத்தது. தமிழில் சூப்பர்ஹிட் ஆன இந்த படம் தொடர்ந்து தெலுங்கிலும் வெளிவந்து ஹிட்டானது.

அதன்பின் லவ் டுடே படம் இந்தியில் ரீமேக் ஆகவுள்ளது என தகவல் வெளியாகியது. இந்த நிலையில் இந்தியில் ரீமேக் ஆகும் லவ் டுடே படத்தில் ஹீரோவாக அமீர் கான் மகன் நடிக்கிறாராம். அதேபோன்று ஹீரோயினியாக ஜான்வி கபூரின் தங்கை குஷி கபூர் நடிக்க இருப்பதாக லேட்டஸ்ட் தகவல் வெளியாகி உள்ளது. விரைவில் இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என கூறுகின்றனர்.