‘ஹிந்தி கொத்தில்லா ஓகோ’… அடுத்து கர்நாடகா வா..!!

தமிழகத்தில் ஹிந்தி தெரியாது போடா ட்ரெண்டிங் ஆனது போல் கர்நாடகாவில் ஹிந்தி கொத்தில்லா ஓகோ என்று வாசகம் ட்ரெண்டாகி உள்ளது.

ஹிந்தி திணிப்புக்கு எதிராக தமிழகத்தில் இப்போது கடும் எதிர்ப்பு எழுந்தது. ஹிந்தி தெரியாது போடா என்ற வாசகம் தமிழகத்தில் ட்ரெண்ட் ஆக தற்போது அதே வாசகத்தை கன்னடத்தில் மொழியாக்கம் செய்து ஹிந்தி கொத்தில்லா ஓகோ என்ற வாசகம் டிரெண்ட் ஆகியுள்ளது. நடிகர்கள் பிரகாஷ்ராஜ், தன்னஞ்ஜெயா ஆகியோர் இந்தித் திணிப்புக்கு எதிராக ஹிந்தி கொத்தில்லா ஓகோ என்று கன்னத்தில் எழுதப்பட்ட வாசகங்கள் பொறிக்கப்பட்ட டீ-ஷர்ட்டை அணிந்து எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றனர். அதன் நீட்சியாக பெங்களூர் ரயில் நிலையத்தில் நுழைந்த கன்னடர்கள் அங்குள்ள பலகையில் எழுதப்பட்டிருந்த ஹிந்தி எழுத்துக்களை அழித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு தமது எதிர்ப்பை பதிவு செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *