மும்பை அணிக்கு இமாலய இலக்கு 214 …… ரிசப்பன்ட் 78 (27) ருத்ர தாண்டவம்….!!

டெல்லி கேப்பிடல் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழந்து  211 ரன்கள் குவித்துள்ளது. 

ஐ.பி.எல் தொடரின் மூன்றாவது போட்டியில் மும்பை இண்டியன்ஸ் அணியும் , டெல்லி கேப்பிடல் அணியும் மோதும் போட்டி மும்பை_யில் உள்ள வான்கேட் மைதானத்தில் நடைபெறுகின்றது . டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்ததையடுத்து டெல்லி கேப்பிட்டல் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ப்ரித்வி ஷா , ஷிகார் தவான் களமிறங்கினர். அணியின் ஸ்கோர் 10_ஆக இருந்த போது ப்ரித்வி ஷா 7 ரன்கள் எடுத்து மிட்செல் மெக்லேனகன் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.

பின்னர் இரண்டாவது விக்கெட்டுக்கு களமிறங்கிய ஷ்ரேயஸ் ஐயர் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார் ஆனால் அது நீண்ட நேரம் நிலைக்கவிலை. 10 பந்துகளை சந்தித்த ஷ்ரேயஸ் ஐயர் 16 ரன்கள் எடுத்து மிட்செல் மெக்லேனகன் பந்தில் ஆட்டமிழந்தார் . இதையடுத்து ஷிகர் தவானும், கொலின் இங்ரமும் அணியை சரிவில் இருந்து மீட்டனர். இருவரும் பொறுப்புடன் விளையாடினர். ஷிகர் தவான் 43, கொலின் இங்ரம் 47 ஆட்டமிழந்தனர். இதையடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர். இறுதியில் ரிசப்பன்ட் ருத்ர தாண்டவம் ஆடினார்.

இதனால் அணியின் ஸ்கோர் மல மலவென உயர அந்த அணி 20 ஓவர் முடிவில் 213 ரன்களை குவித்தது. ரிசப் பண்ட் அதிகபட்சமாக 78* (27) திவேதியா 9*(4) ரன்களுடன்   ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.  மும்பை அணி சார்பில் மிட்செல் மெக்லேனகன் 3 விக்கெட் வீழ்த்தினார்.தற்போது மும்பை அணி களமிறங்கி விளையாடி வருகிறது.