அதிகாரிகளின் மெத்தனப் போக்கே காரணம்… “எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் இது தொடர்கிறது”… உயர் நீதிமன்றம் கண்டனம்..!!

பேனர்கள் விழுந்து உயிரிழப்பு ஏற்பட அதிகாரிகளின் மெத்தனப் போக்கே காரணம் என்று உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. 

சென்னை குரோம்பேட்டையை  சேர்ந்த  இளம்பெண் சுபஸ்ரீ (வயது 23) என்பவர்  ஒரு பொறியியல் பட்டதாரி.  கந்தன்சாவடியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் இவர் பணி முடிந்து   பள்ளிக்கரணை வழியாக சாலையில் தனது பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையின் நடுவில் திருமணத்திற்காக வைக்கப்பட்டிருந்த அதிமுக பேனர்களில் ஒன்று சுபஸ்ரீ மீது விழுந்துள்ளது.

Image result for subhasri

இதனை எதிர்பார்க்காத  சுபஸ்ரீ சாலையில் தூக்கி வீசப்பட்டார். அந்த நேரத்தில் பின்னால் வந்த தண்ணீர் லாரி ஒன்று அவர் மீது ஏறியதில் பரிதாபமாக உயிரிழந்தார். லாரி ஓட்டுநர் மனோஜ் கைது செய்யப்பட்டார். இளம்பெண் உயிரிழப்புக்கு காரணமான பேனரை வைத்த முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் மீது பள்ளிக்கரணை போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பேனர் அடித்த அச்சகத்துக்கு மாநகராட்சி சீல் வைத்துள்ளது.

இந்நிலையில்  பேனரால் உயிரிழந்த சுபஸ்ரீ தொடர்பான முறையீட்டின் போது விதிமீறல் பேனர் பற்றி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் சத்யநாராயணன் சேஷசாயி அமர்வு கருத்து தெரிவித்துள்ளது. அப்போது, பேனர்கள் விழுந்து உயிரிழப்பு ஏற்பட அதிகாரிகளின் மெத்தனப் போக்கே காரணம் என்று கண்டனம் தெரிவித்துள்ளது.  எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் விதிகளை மீறி பேனர்கள் வைப்பது தொடர்கிறது என்றும்   உயர்நீதிமன்றம் குற்றஞ்சாட்டியுள்ளது.மேலும் ரூ 2 லட்சம் கருணைத் தொகை வழங்குவதுடன் பிரச்சனை முடிந்து விட்டதாக கருதுகின்றனர். தற்போது  பள்ளிக்கரணை சுபஸ்ரீ வழக்கை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை செய்து வருகின்றது