ஹீரோ நிறுவனம் தனது புதிய படைப்பான எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது .
ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனம் இந்தியாவில் ஆப்டிமா இ.ஆர். மற்றும் நிக்ஸ் இ.ஆர். எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை அறிமுகம் செய்துள்ளது. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் முறையே ரூ. 68,721 மற்றும் ரூ. 69,754 என அந்நிறுவனம் நி்ர்ணயம் செய்துள்ளது . மேலும் இந்த புதிய ஸ்கூட்டர்கள் ஹீரோ பிராண்டின் ஹை-ஸ்பீடு சீரிஸ் பிரிவில் கிடைக்கிறது .

இந்நிலையில் இரு ஸ்கூட்டர்களும், ஸ்டான்டர்டு மாடல்களில் வழங்கப்பட்டதை போன்றே எலெக்ட்ரிக் மோட்டார்களை வழங்கியுள்ளது . குறிப்பாக இதில் இரு பேட்டரி பேக்குகள் கொடுக்கப்பட்டுள்ளது .மேலும் ஸ்டான்டர்டு மாடலில் ஒரு பேட்டரி பேக் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது . இந்த ஹீரோ எலெக்ட்ரிக் ஆப்டிமா இ.ஆர். மாடலில் 600 வாட் BLDC எலெக்ட்ரிக் மோட்டார் மற்றும் 48 வோல்ட் ஒற்றை பேட்டரி பேக் கொண்டுள்ளது .
இந்த புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் ஸ்டான்டர்டு மாடலில் உள்ளதை போன்றே மணிக்கு அதிகபட்சம் 40 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் வழங்கப்பட்டுள்ளது . இதை ஒருமுறை சார்ஜ் செய்தால் 100 கிலோமீட்டர் செல்லும் எனவும் இந்த பேட்டரிகளை முழுமையாக சார்ஜ் செய்ய 4.5 மணி நேரம் ஆகும் எனவும் ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனம் கூறியுள்ளது .
மேலும் , ஹீரோ எலெக்ட்ரிக் நிக்ஸ் இ.ஆர். மாடலில் 48 வோல்ட் பேட்டரி பேக் மற்றும் 600 வாட் BLDC மோட்டார் வழங்கப்பட்டுள்ளது. இது ஆப்டிமா இ.ஆர். செயல்திறனை வழங்குகிறது. இந்த வாகனம் மணிக்கு அதிகபட்சம் 40 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் எனவும் மற்றும் இதை ஒருமுறை சார்ஜ் செய்தால் 100 கிலோமீட்டர் வரை செல்லும் திறனையும் கொண்டுள்ளது எனவும் அந்நிறுவனம் கூறியுள்ளது .