சிம்புவிற்கு ஜோடியாக நடிக்க தேர்வான கதாநாயகிகள்.. STR 48 அப்டேட்..!!

கொரோனா காலகட்டத்தில் உடல் எடையை முழுமையாக குறைத்து தற்போது வேற லெவல் லுக்-ற்க்கு மாறி இருக்கிறார் சிம்பு. மாநாடு, வெந்து தணிந்தது காடு ஆகிய படங்கள் வெளியாக அடுத்தடுத்து ஹிட் கொடுத்தார். எனவே இவரின் அடுத்த படமான பத்து தல மார்ச் 30ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் எஸ்டிஆர் 48வது படத்தின் அறிவிப்பும் சமீபத்தில் வெளியாகி உள்ளது.

தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் கமலஹாசனின் ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இந்த படத்தை தயாரிக்கிறது. எனவே சிம்புவிற்கு ஜோடியாக பூஜா ஹெக்டே, ராஷ்மிகா மந்தனா மற்றும் த்ரிஷா பதானியை தேர்வு செய்து வைத்திருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் இதில் சிம்பு உடன் ஜோடி சேர்வது யார் என்று தெரியவில்லை. யார் நடித்தாலும் சிம்புவுடன் நடிக்கும் முதல் படமாக அவர்களுக்கு அமைய இருப்பதால் புதிய ஜோடியை காண ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.