“இது என்ன வேடிக்கையா”… கொரோனாவால் இறந்தவரின் சடலத்துடன் டான்ஸ் ஆடும் செவிலியர்கள்… சர்ச்சையான வீடியோ!

கொரோனாவால் பலியான ஒருவரின் உடலுக்கு செவிலியர்கள் நடனமாடுவது போன்ற வீடியோ ஒன்று வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது டிக்டாக்கில் ஒரு வீடியோ வெளியாகி செமையாக வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், இரண்டு பெண்கள் மற்றும் இரண்டு ஆண்கள் என 4 செவிலியர்கள் ஒரு பிளாஸ்டிக் பையில் சடலம் போன்ற காட்சியளிக்கும் ஒரு பொருளை தங்களது தோளின் மேல் வைத்து கொண்டு நடனமாடி செல்கின்றனர்.  ஆனால் அது உண்மையான சடலமாக என்று தெரியவில்லை. இந்த சம்பவம் அமெரிக்காவில் நடந்துள்ளது.

கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நேரத்தில் மக்கள் அனைவரும் வீடுகளில் வீடுகளுக்குள்ளேயே இருக்க வேண்டும் என்பதை உணர்த்தும் விதமாக இந்த காட்சி அமைந்துள்ளது.  இந்த டிக் டாக் வீடியோவை பார்த்த பலரும் இது என்ன வேடிக்கையா என கோபப்படுகின்றனர். ஆனாலும் சிலர் இது மருத்துவ பணியாளர்கள் கொரோனாவை வென்றுவிட்டார்கள் என்பதற்கு ஒரு அடையாளம் காட்டப்படுகிறது என்று கூறியுள்ளனர்.

மேலும் சில செவிலியர்கள் பணிகளால் ஏற்படும் மன அழுத்தத்தை போக்குவதற்காகவே இப்படி டிக் டாக் வீடியோக்களை வெளியிட்டு தங்களை நிதானப் படுத்திக் கொள்வதாக பலர் அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். ஒட்டுமொத்தத்தில் பார்த்தோமென்றால் இந்த வீடியோ ஆதரவு, எதிர்ப்பு என கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *