இறப்பிலும் அனைத்து உதவிகளையும் செய்த… உதயநிதி ஸ்டாலினுக்கு நன்றி- வெங்கட் பிரபு..!!

கங்கை அமரனின் மனைவியும், வெங்கட் பிரபுவின் தாயாருமான மணிமேகலைக்கு கடந்த சில தினங்களுக்கு முன் உடல்நலம் பாதிக்கப்பட்டு காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். பின்னர் அவர் சிகிச்சை பலனின்றி இரண்டு நாட்களுக்கு முன்பு உயிரிழந்தார். அவரின் தாயார் மறைவிற்கு திரையுலக பிரபலங்கள் அனைவரும் தங்களது இரங்கல்களை தெரிவித்து வந்தனர். இதை அடுத்து வெங்கட்பிரபு தனது தாயார் மறைவு குறித்து அறிக்கை ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளார்கள். எனது தந்தை திரு கங்கைஅமரன் அவர்களும், எனது தம்பி பிரேம்ஜியும், நானும் எனது குடும்பமும் எங்கள் குடும்பத்தின் குல தெய்வத்தை இழந்து நிற்கிறோம்.

இப்படிப்பட்ட பேரிடர் காலத்தில் சிக்கித் திணறிக் கொண்டிருக்கும் நிலையில் எங்களை அரவணைத்து தோள் கொடுத்து நின்ற ஒவ்வொருவருக்கும் என் குடும்பத்தின் சார்பாக என் ஆத்மார்த்தமான நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன் என்று தெரிவித்திருந்தார். இதையடுத்து காவேரி மருத்துவமனையில் மருத்துவர்கள், மருத்துவ குழுவினர் எங்களது தாயாரை மிகவும் சிறந்த முறையில் பார்த்துக்கொண்டனர். அவர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி. அதைத்தொடர்ந்து எங்களோடு இமயம் போல் நின்று தாயாரின் இறுதி நாட்களிலும், இறப்பிலும் அனைத்து உதவிகளையும் தக்க நேரத்தில் செய்த என் நண்பர் திரு உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு நான் வாழ்நாள் முழுவதும் கடமைப்பட்டிருக்கிறேன் என்றும் அதில் தெரிவித்திருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *