15 நிமிடம் தான்…. ஹெலிகாப்டரில் போகலாம்… மதுரை மக்களுக்கு ஒரு இன்பச் செய்தி…!!

தனியார் நிறுவனம் சார்பில் மதுரையை சுற்றி பார்க்க ஹெலிகாப்டர் சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டத்தில் உள்ள தனியார் ஹெலிகாப்டர் நிறுவனம் மற்றும் பொறியியல் கல்லூரி ஒன்று இணைந்து ஹெலிகாப்டர் சேவையை தொடங்கியுள்ளனர்.  மதுரை முழுவதும் உள்ள சுற்றுலாத் தலங்களான அழகர்கோவில் , ஒத்தக்கடை மதுரை மாரியம்மன் கோவில், திருப்பரங்குன்றம்,  கீழக்குயில் குடியில் உள்ள புராண சின்னங்கள் உள்ளிட்ட அனைத்தையும் சுமார் 15 நிமிடத்தில் சுற்றிப் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த ஹெலிகாப்டரில் பயணிக்கும் ஒருவருக்கு ரூபாய் 6000 வீதம் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆறு பேர் வரை இந்த ஹெலிகாப்டரில் பயணிக்கலாம்.  முதற்கட்டமாக 29ஆம் தேதி வரை மட்டுமே இச்சேவை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.  அதன்பின் பயணிகளின் வருகையை பொறுத்து இந்த சேவை மேலும் நீட்டிக்கப்படும் என அந்த தனியார் நிறுவனத்தின் நிர்வாகிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  மதுரை முழுவதையும் குறுகிய நேரத்தில் சுற்றிப்பார்க்கும் இச்சேவை மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.