“பஹமாஸில் கீழே விழுந்து நொறுங்கிய ஹெலிகாப்டர்” கோடீஸ்வரர் உட்பட 7 பேர் பலி…!!

பஹமாஸிலிருந்து புளோரிடா மாகாணத்துக்கு சென்ற ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில், அமெரிக்க கோடீஸ்வரர் உட்பட 7 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர். 

உலகில் விமானம் மற்றும் ஹெலிகாப்டர் கீழே விழுந்து  விபத்துக்குள்ளாவது அடிக்கடி நிகழ்ந்து வருகிறது. அது தொடர்கதையாகவே நீடித்து வருகிறது. அந்த வகையில் பஹமாஸிலிருந்து நேற்று 7 பேரை ஏற்றிக்கொண்டு ஹெலிகாப்டர் ஒன்று அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள போர்ட் லவுடர்டேல் பகுதியை (Fort Lauderdale) நோக்கி சென்றது.

Image result for Helicopter crashes into Florida from Bahamas, 7 dead

இந்த ஹெலிகாப்டரில் பயணம் செய்த 7 பேரில் அமெரிக்காவில் பல்வேறு நிலக்கரி சுரங்கங்களின் உரிமையாளரும், மிகப்பெரிய கோடீஸ்வருமான கிறிஸ் க்ளைனும் ஒருவர். ஹெலிகாப்டர் அங்கிருந்து புறப்பட்ட சிறிது நேரத்திலேயே திடீரென கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்து நொறுங்கியது. இதில் ஹெலிகாப்டரில் பயணம் செய்த 7 பேரும் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *