யானையை அழைத்து ஆப்பு வைத்துக் கொண்ட வாரிசு… விலங்குகள் நல வாரியம் நோட்டீஸ்…!!!

யானையை அழைத்து வந்தது குறித்து ஏழு நாட்களுக்குள் விளக்கம் அளிக்க தயாரிப்பு நிறுவனத்திற்கு விலங்குகள் நல வாரியம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

வாரிசு திரைப்படத்தில் அனுமதி இல்லாமல் யானைகளை பயன்படுத்தியதாக வந்த புகார் குறித்து ஏழு நாட்களுக்குள் விரிவான விளக்கம் அளிக்க தயாரிப்பு நிறுவனத்திற்கு விலங்குகள் நல வாரியம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. வம்சி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இத்திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்து வருகின்றார்.

பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலர் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். படபிடிப்பு கடந்த சில நாட்களாக சென்னை அருகே உள்ள தனியார் பொழுதுபோக்கு பூங்காவில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் படபிடிப்பு தளத்திற்கு உரிய அனுமதி இல்லாமல் யானையை அழைத்து வந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. இந்த குற்றச்சாட்டை தொடர்ந்து யானைகளை பயன்படுத்தியது குறித்து ஏழு நாட்களுக்குள் விளக்கம் அளிக்க தயாரிப்பு நிறுவனத்திற்கு விலங்குகள் நல வாரியம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

Leave a Reply