இடியுடன் கூடிய கனமழை…. சுவர் இடிந்து விழுந்து பெண் பலி …!!

சென்னையில் கனமழையால் சுவர் இடிந்து விழுந்து ஜெரினாபானு என்பவர் பலியாகியுள்ளார்.

நேற்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் கூறுகையில் , வளி மண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகம் மற்றும் புதுச்சேரி உட்பட 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என்று தெரிவித்தார்.அந்த வகையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில்  இரவு முதல் இடிமின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருகின்றது.

திருவள்ளூரில் ஒரே நாளில் 21 செ.மீ., பூண்டியில் 20 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. அதே போல கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அருகே சவுந்தரசோழபுரத்தில் உள்ள வெள்ளாற்றின் தரைப்பாலம் அடித்துச் செல்லப்பட்டது.சென்னை மண்ணடி ஐயப்பசெட்டி தெருவில் கனமழை காரணமாக வீட்டின் சுவர் இடிந்து ஜெரினாபானு என்பவர் பலியாகியுள்ளார்.