அஸ்ஸாமில் ஏற்பட்ட கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதில் சுமார் 8,00,000 மக்கள் பாதிக்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்கி வருகின்றனர்.
வடகிழக்கு மாநிலங்களையொட்டி கடந்த சில தினங்களாக மழை சரமாரியாக பொழிந்து வருகிறது. அருணாச்சலப் பிரதேசம், சிக்கிம், உள்ளிட்ட மாநிலங்களில் நூற்றுக்கணக்கான கிராமங்களை வெள்ளம் சூறையாடியுள்ளது. குறிப்பாக அஸ்ஸாமில் பாய்ந்தோடும் பிரம்மபுத்திரா உள்ளிட்ட 5 நதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி வருகிறது. இதனால் அம்மாநிலத்தின் 21 மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அபாயகரமான சூழல் நிலவி வருகிறது.

இதனால் சுமார் 8,00,000 பேர் தங்களது வீடுகளையும் ,உடைமைகளையும் பறிகொடுத்து விட்டு பல்வேறு நிவாரண முகாம்களில் தங்கி வருகின்றனர். ராணுவம், தேசிய பேரிடர் மீட்புப் படை, தீயணைப்புத்துறை ,காவல்துறை ஆகிய துறைகளை சேர்ந்த வீரர்கள் தீவிர மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து கன மழையானது மேலும் ஒரு வாரத்திற்கு நீடிக்குமென வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.