சென்னையில் கனமழை…. பிராட்வே_யில் முழங்கால் அளவு தண்ணீர்… பொதுமக்கள் அவதி…!!

சென்னை பிராட்வே பகுதியில் மழை நீர் முழங்கால் அளவு தேங்கியுள்ளதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.

சென்னையின் பல பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகின்றது.சென்னை புறநகர், காஞ்சிபுரம்,  திருவள்ளூர் உள்ளிட்ட பகுதிகளில் இரவு விடிய விடிய கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கி உள்ளது.சென்னை பிராட்வே மண்ணடி பகுதியில் முழங்கால் வரை மழை நீர் தேங்கி உள்ளது.

மழை நீர் தேங்க கால்வாய்கள் முழுவதிலும் உள்ள அடைப்பு தான் காரணம்  என்று ஏற்பட்டு தண்ணீர் தேங்கி இருப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர் . அதே போல தம்பு செட்டி தெரு , செம்புதாஸ் தெருவிலும் தண்ணீர் தேங்கி கிடக்கின்றது. மாநகராட்சி துப்புரவு ஊழியர்கள் தற்போது தண்ணீரை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இருந்தாலும் தொடர்ந்து மழை பெய்து வருவதால் தண்ணீரை அகற்றுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.