நீலகிரியில் தொடர் கனமழை…. பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வு…!!

நீலகிரியில் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 5ஆக அதிகரித்துள்ளது 

நீலகியில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. அம்மாவட்டத்தில் கூடலூர், பந்தலூர், குந்தா ஆகிய தாலுகாக்களில்  கனமழை வெளுத்து வாங்குகிறது. தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது  மற்றும் 5 பேர் உயிரிழந்தனர். இந்த கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. வெள்ளத்தில் சிக்கிய மக்களை பாதுகாப்பாக வேறு இடத்திற்கு மீட்பு படையினர் மீட்டு வேறு இடத்திற்கு அனுப்பி வைத்து வருகின்றனர்.

Image result for Heavy rains and floods in Nilgiris killed 5 people.

இந்த கனமழையால்  குருட்டுக் குழி பகுதியில் வெள்ளப்பெருக்கில் சிக்கி விமலா (38),  சுசீலா (36) ஆகியோர் உயிரிழந்தனர். காட்டுக் குப்பை பகுதியில் பெய்த கனமழையால் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் வடநாட்டு இளைஞர் ஒருவர்  பலியாகியுள்ளார். ஏற்கனவே நடுவட்டம் இந்திரா நகரில் வீட்டின் சுவர் இடிந்து தாய் அமுதா (34) மகள் காவ்யா (10) ஆகியோர் உயிரிழந்த நிலையில் தற்போது பலி எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளது.  .