வெளுத்து வாங்கிய மழை…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய மூதாட்டி…. அதிகாரிகளின் அதிரடி உத்தரவு….!!!

மழையினால் மூதாட்டி வீட்டின் சுவர் இடிந்து விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் மாவட்டத்தில் உள்ள நச்சலூர் பகுதியில் மூதாட்டி காவேரி வசித்து வருகின்றார். இந்நிலையில் நச்சலூர் பகுதியில் கனமழை பெய்த காரணத்தினால் இவரது வீட்டின் சுவர் நீரில் ஊறி எதிர்பாராத விதமாக இடிந்து விழுந்ததில் அதிஷ்டவசமாக காவேரி உயிர் தப்பினார்.

இதுகுறித்து தகவலறிந்த நங்கவரம் வருவாய் ஆய்வாளர் மற்றும் கிராம நிர்வாக அதிகாரி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சேதமடைந்த வீட்டை பார்வையிட்டு நிவாரண உதவி வழங்க உத்தர விட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *