“கனமழை” 4 மாவட்டங்களில் 2 நாள் நீடிக்கும்… வானிலை ஆய்வு மையம் தகவல்..!!

தமிழகத்தில் சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், மேலும் 2 நாட்களுக்கு மழை  நீடிக்கும்  என  வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் கடந்த சில நாட்களாகவே நல்ல மழை பெய்து வருகிறது. கடந்த இரண்டு நாட்களாக அதிகாலையில் பெய்து வரும் மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதேபோல் சேலத்தில் அம்மாபேட்டை புதிய பேருந்து நிலையம் பழைய பேருந்து நிலையம் உள்ளிட்ட இடங்களில் நள்ளிரவில், ஒரு மணி நேரம் நல்ல மழை பெய்தது. இவ்வேளையில் தென்தமிழகத்தில் மழைபொழிவானது சற்று குறைந்துள்ளது.

Image result for கனமழை

இதனால் குற்றால அருவியில் தண்ணீர் குறைந்தது. இதையடுத்து நேற்று மாலை முதல் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் திருச்சி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. வளிமண்டல மேல் அடுக்கில் ஏற்பட்டுள்ள காற்று சங்கமத்தின் காரணமாக வட தமிழகம், புதுவை மற்றும் காரைக்காலில் இன்றும் நாளையும் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.