தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு அதி கனமழை… இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!!

தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை  ஆய்வு மையம்  எச்சரித்துள்ளது.

வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாக தமிழகத்தில் 3 நாட்களுக்கு பரவலாக கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மத்திய மேற்கு வங்கக்கடல் மற்றும் ஆந்திர கடற்கரையோரப் பகுதிகளில் அடுத்த 12 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Image result for heavy rain

இதன் காரணமாக மகாராஷ்டிர மாநிலத்தில் இன்றும் நாளையும் பரவலாக கனமழை முதல் மிக கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய பிரதேச மாநில பகுதிகளில் கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது. அதேபோல தமிழகம் ஆந்திரா தெலுங்கானா கர்நாடகா ஆகிய பகுதிகளிலும் குறிப்பாக தமிழகத்தின் வட மாவட்டங்களில் அடுத்த 3 நாட்களுக்கு பரவலாக கனமழை முதல் மிக அதிக கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.