இன்று 4 மாவட்டங்களில் கனமழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம்..!!

தமிழகத்தில் இன்று 4 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கடந்த சில நாட்களாகவே வெப்பச்சலனம் மற்றும் மேலடுக்கு சுழற்சி காரணமாக மழை பெய்து வருகின்றது. நேற்று மாலை சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. நங்கநல்லூர், வடபழனி, போரூர், கிண்டி ஈக்காட்டுத்தாங்கல், தாம்பரம், கோயம்பேடு, முகலிவாக்கம், திருவான்மியூர்  உள்ளிட்ட பல  இடங்களில் மழை பெய்தது.

Image result for Heavy Rain in 4 Districts - Meteorological Department

இந்த நிலையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று அனேகமாக ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்றும்,  நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் ஆகிய 4 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.