10 மாவட்டம்… ”சுழல் காற்று வீசும்” கடலுக்கு செல்லாதீங்க….. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…!!

10 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார்.

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் , தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த  24 மணி நேரத்திற்கு பெரும்பாலான மாவட்டங்களின் அனேக இடங்களில் வெப்பச் சலனம் மற்றும் மேலடுக்கு சுழற்சி காரணமாக லேசானது முதல் மிதமான மழையும் , தூத்துக்குடி , ராமநாதபுரம் , விருதுநகர் , சிவகங்கை , திருவள்ளூர் , காஞ்சிபுரம் , வேலூர் , தஞ்சாவூர் , திருவாரூர் மற்றும் நாகை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் வாய்ப்புள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக புதுக்கோட்டை மாவட்டம் பெருங்களூரில் 8 சென்டி மீட்டர் மழையும் , தஞ்சாவூர் மாவட்டம் கல்லணையில் 7 செண்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மாலையோ அல்லது இரவிலோ இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.மீனவர்களுக்கான எச்சரிக்கை அடுத்த இரண்டு நாட்களுக்கு குமரிக்கடல் , மாலத்தீவு மற்றும் அதனை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதியில் சுழல் காற்று வீசுவதால் மீனவர்கள் மேற்கூறிய இடங்களுக்கு செல்ல வேண்டாம் என்று  எச்சரிக்கை விடுத்தார்.