கன மழை பாதிப்பு – முதல்வர் ஆலோசனை ….!!

நீலகிரி வெள்ள பாதிப்பு குறித்து முதல்வர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகின்றது.

நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பெய்து வந்த கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டு இருந்தது.இந்த நிலையில் தமிழக அரசின் சார்பில் நீலகிரி மாவட்டத்தில் ஏற்பட்ட மழை பாதிப்புகளை ஆய்வு செய்து நிவாரண பணியை மேற்கொள்ளை வருவாய் துறை அமைச்சர் உதயகுமார் நேரடியாகச் சென்று அங்கு களப்பணியில் ஈடுபட்டு வந்தார் .

Image result for eps ஆலோசனை கூட்டம்

இதை தொடர்ந்து நேற்று தமிழக துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் நேரடியாக சென்று மழை பாதிப்புகளை ஆய்வு செய்தார். இதில் ஏற்பட்ட வெள்ள சேதாரம் மற்றும் பாதிப்புகளை முழுமையாக கேட்டறிந்தார். இதையடுத்து தற்போது தலைமைச் செயலகத்தில் முதல்வர் தலைமையில் நடைபெறும் ஆலோசனை கூட்டம் நடைபெறுகின்றது. இதில் நீலகிரி வெள்ள சேதாரம் மற்றும் மீட்புப்பணி ,  நிவாரணம் குறித்து விவாதிக்கபட இருக்கின்றது.வெள்ள சேத மதிப்பீட்டின் அடிப்படையில் மத்திய அரசிடம் நிதி   கோருவது குறித்தும் விவாதிக்கப்படுகின்றது.