கடுமையான பனிமூட்டம்…. சிரமப்படும் வாகன ஓட்டிகள்…. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு…!!

கடலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக இரவு நேரத்தில் கடுமையான குளிர் நிலவுகிறது. மேலும் காலை 8 மணி வரை பனிமூட்டம் அதிகமாக இருப்பதால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் மிகவும் சிரமப்படுகின்றனர். இந்நிலையில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாததால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி செல்கின்றனர். மேலும் பனிமூட்டம் காரணமாக அதிகாலை வேலைக்கு செல்லும் பொதுமக்களும், பள்ளிக்கு செல்லும் மாணவர்களும் மிகவும் சிரமப்படுகின்றனர்.