“தொடரும் கத்திரி வெயில் பாதிப்பு “பொதுமக்கள் அவதி ..!!

கத்திரி வெயிலின் தாக்கம் மேலும் மூன்று நாட்களுக்கு நீடிக்க உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது .

கடந்த ஐந்தாம் தேதி அன்று தொடங்கிய கத்தரி வெயிலானது இன்றுவரை தமிழக மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது. இதனைத் தொடர்ந்து மதுரை ,சேலம், வேலூர், சென்னை, நாகை, திருத்தணி உள்ளிட்ட இடங்களில் வெயிலின் தாக்கம் 100 டிகிரியை தாண்டியது.

இந்நிலையில் கத்திரி வெயிலின் தாக்கம் நாளையுடன் முடிவடைய உள்ளது. இதனால் வெயிலின் அளவு படிப்படியாக குறைய வாய்ப்பு உள்ளது. இருப்பினும் திருவள்ளூர் முதல் தேனி  வரையிலான மாவட்டங்களில் அனல் காற்று வீசக்கூடும் என்றும் அதன் உள் மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.