“தங்கத்தை வென்ற முதல் இந்தியர் என்ற பெருமைக்குரியவர்” பிவி சிந்துவுக்கு ரவி சாஸ்திரி மனமார்ந்த வாழ்த்து..!!

தங்கத்தை வென்ற முதல் இந்தியர் என்ற பெருமைக்குரிய பி.வி சிந் துவுக்கு என்று ரவி சாஸ்திரி மனமார்ந்த வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். 

உலக சாம்பியன்ஷிப்ஸ் பேட்மிண்டன் தொடர் போட்டி சுவிட்சர்லாந்தில் நடைபெற்று வருகின்றது. நேற்று பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு போட்டியின்  இறுதிப் போட்டியில் இந்தியாவின் முன்னணி வீராங்கனையான பி.வி சிந்து ஜப்பானைச் சேர்ந்த நசோமி ஒகுஹாராவை எதிர்கொண்டு 21 – 7 , 21 – 7 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று முதல்முறையாக சாம்பியன் பட்டம் வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளார்.

Image

இதையடுத்து தங்கம் வென்ற வீராங்கனை பி.வி சிந்து_க்கு பல்வேறு தரப்பினர்களும்  வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரும், தற்போதைய இந்திய அணியின் தலைமை பயிற்சியாளருமான ரவி சாஸ்திரி ட்விட்டரில் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். அதில், “உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் 2019 -ல் தங்கத்தை வென்ற முதல் இந்தியர் என்ற பெருமைக்குரிய பி.வி சிந் துவுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். உங்கள் சிறந்த சாதனைக்கு மிகவும் பெருமை” என்று பதிவிட்டுள்ளார்.