தேனி மாவட்டத்திலுள்ள கோடாங்கி பட்டியில் சண்முகம் என்பது வசித்து வந்துள்ளார். இவர் அடிக்கடி உடல் நல குறைவால் பாதிக்கப்பட்டு அவதி அடைந்து வந்துள்ளார். இந்நிலையில் தனது வீட்டில் அவர் மயங்கி கிடந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அவருடைய மகன் பாலமுருகன் சண்முகத்தின் அருகில் சென்று பார்த்தபோது பூச்சிக்கொல்லி மருந்து பாட்டில் கிடந்தது.
இதனால் அவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதை அறிந்த பாலமுருகன் தனது தந்தையை மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு அவரை பரிசோதித்துப் பார்த்த மருத்துவர்கள் உயிரிழந்து விட்டதாக கூறியுள்ளனர். இந்த தற்கொலை குறித்து பழனி செட்டிபட்டி காவல்நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறனர்.