தலை இல்லாத முண்டம் ADMK… OPS-யை சந்திப்பேன்: TTV அதிரடி …!!

செய்தியாளர்களிடம் பேசிய அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், பாராளுமன்ற தேர்தலை நோக்கி தான் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் அதற்கான பணிகளில் தொடர்ந்து செய்து கொண்டு வருகிறோம். இந்த தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் முத்திரை பதிக்கும். இந்தியாவின் பிரதமரை தேர்ந்தெடுக்கின்ற பணியில் நாங்களும் அணிலைப் போல பணியை சிறப்பாக ஆற்றுவோம் என்ற நம்பிக்கையில் நாங்கள் பயணித்துக் கொண்டிருக்கிறோம்.

தலை இல்லாத முண்டமாகஅதிமுக கட்சி இருக்கிறது. திரு.பன்னீர்செல்வம் ஒரு பக்கமும், திரு.பழனிச்சாமி ஒரு பக்கமும் பிரிந்து நிற்கிறார்கள். ஆனால் அவர்கள் இரண்டு பேரும் தான் அந்த கட்சிக்கு தலைமையாக தேர்தல் ஆணையம் நியமித்திருந்தது, அவர்கள்தான் நாளைக்கு தேர்தல் என்றால் வேட்பாளர்களுக்கு படிவம் கொடுக்க வேண்டிய இடத்தில் கையெழுத்து போட்டு இருக்கிறார்கள், அதை பழனிச்சாமி மட்டும் செய்து விட முடியாது, அதனால் தான் அது செயல்படாத இயக்கமாக இருக்கிறது.

இன்னும் சொல்லப்போனால் பொதுக்குழு தேர்ந்தெடுத்தபடி அவர் நான்கு மாதங்களில் தேர்தல் வைப்போம் என்று சொல்லி இருந்தார்கள். அவர்கள் கட்சி தேர்தல் வைக்க முடியவில்லை, பொதுச்செயலாளர் தேர்தல் வைக்க முடியவில்லை, அதனால் அவர் இடைக்கால பொதுச் செயலாளர் என்று சொல்வது கூட சட்டப்படி தவறு என்றுதான் நான் நினைக்கிறேன். வாய்ப்பு கிடைத்தால் என்னை சந்திப்பதாக டிடிவி தினகரன் சொன்னது போல, நானும் வாய்ப்பு கிடைத்தால் ஓ.பன்னீர்செல்வத்தை சந்திப்பேன் என தெரிவித்தார்.

Leave a Reply