” மக்கள் எங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கையை காப்போம்” முக ஸ்டாலின் ட்விட்..!!

மக்களவை தேர்தலில் வெற்றி பெற்றதற்கு திமுக தலைவர் ஸ்டாலின், மக்கள் எங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கையை எந்நாளும் காப்போம் என்று தெரிவித்துள்ளார்.  

நாடு முழுவதும் 7 கட்டமாக நடைபெற்ற மக்களவை தேர்தல் நடைபெற்று  இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. இந்திய அளவில்  பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 345 தொகுதிகளில் முன்னிலை வகித்து மீண்டும் ஆட்சியை உறுதி செய்துள்ளது.  தமிழகத்தை பொறுத்தவரையில் திமுக 38 மக்களவை தொகுதிகளில் மகத்தான  வெற்றி பெற்றுள்ளது. ஆனால் அதிமுக 1 தொகுதிகள் மட்டுமே கைப்பற்றியுள்ளது. இதனால் திமுகவினர் கொண்டாட்டத்தில் உள்ளனர்.

Image result for M. K. Stalin

இந்நிலையில் தி.மு.க தலைவர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். அதில் முக ஸ்டாலின், தலை வணக்கம் தமிழகமே! மக்களவை தேர்தலில் திமுக கூட்டணிக்கு மகத்தான வெற்றியை  தந்த மக்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி! மக்கள் எங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கையை எந்நாளும் காப்போம்! தமிழகத்தின் உரிமையை காக்க என்றும் குரல் கொடுப்போம்! என்று பதிவிட்டுள்ளார்.