எனது நெருக்கடியை குறைத்தவர் இவர்தான்…விராட் கோஹ்லி பாராட்டு…!!!

ஸ்ரேயஸ் அய்யர் சிறப்பாக செயல்பட்டு தனது நெருக்கடியை குறைத்ததாக இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லி பாராட்டியுள்ளார்.

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்ற பிறகு விராட் கோஹ்லி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில் எங்களது ஆட்டம் நல்ல முறையில் முடிந்தது. தொடக்க ஆட்டக்காரர்களான  ஷிகர் தவான் ரோகித் சர்மா ஆகியோர் அதிக ரன்கள் எடுக்க தவறினர். எனவே அனுபவம் வாய்ந்த வீரரான நான் எனது பொறுப்பை ஏற்று அதிக ரன்கள் எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

Image result for ஷ்ரேயஸ் ஐயர் virat kohli

அந்த பொறுப்பை ஏற்று நான் சதம் அடித்தது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. மேலும் ஸ்ரேயஸ் அய்யர் நம்பிக்கை மிகுந்த வீரர் அவரிடம் சரியான அணுகுமுறை இருக்கிறது அவர் அணியின் உத்வேகத்தை தக்க வைத்ததுடன் எனது நெருக்கடியை குறைக்கும் வகையில் சிறப்பாக செயல்பட்டார் என்று கூறினார்.