குக் வித் கோமாளி பிரபலம் பாபா பாஸ்கரின் குடும்ப புகைப்படத்தை பார்த்துள்ளீர்களா…? இதோ உங்களுக்காக…!!!

குக் வித் கோமாளி பிரபலம் பாபா பாஸ்கரின் குடும்ப புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது.

பிரபலத் தொலைக்காட்சிச் சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிகழ்ச்சி தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. அதன்படி அஸ்வின், பாபா பாஸ்கர், பவித்ரா, ஷகிலா, கனி ஆகியோர்  இறுதிச்சுற்றுக்கு தேர்வாகியுள்ளனர்.

இந்நிலையில் இந்நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றுள்ள பாபா பாஸ்கரின் குடும்ப புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. அதில் அவர் தன் மனைவி மற்றும் மகன், மகளுடன் இருக்கிறார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.