பாலிவுட் நடிகர் சோனு சூட் கொரோனா ஊரடங்கு காலத்தில்  பல்லாயிரக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உதவி செய்து வந்தார். மேலும் கஷ்டப்படும் ஏழை மக்களுக்கும் தன்னால் முயன்ற உதவிகளை செய்து வருகிறார். இதனால் அவருக்கு மக்கள் கோவில் கட்டி வழிபாடு செய்தனர். இந்நிலையில் மும்பை விமான நிலையத்தில் மயங்கி விழுந்த ஒருவரின் உயிரை நடிகர் சோனு சூட் காப்பாற்றிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இமிக்ரேஷன் கவுன்ட்டரில் சுயநினைவை இழந்த அந்த நபரின் நெஞ்சில் கை வைத்து சோனு CPR கொடுத்துள்ளார். சிறிது நேரத்தில் அந்த நபருக்கு சுயநினைவு திரும்பியுள்ளது. சோனுவுக்கு ஏர்போர்ட் அதிகாரிகள் நன்றி தெரிவித்தனர். அவருக்கு சமூக ஊடகங்களில் வாழ்த்துகள் குவிகின்றன.