ஹர்பஜன் சிங் அபார பந்து வீச்சு…. 2 விக்கெட்டை இழந்தது RCB…..!!

12ஆவது ஐ.பி.எல் கிரிக்கெட் திருவிழாவின் முதல் போட்டி  சென்னை சேப்பாக்கம் M.A சிதம்பரம் மைதானத்தில் தொடங்கியது.  இப்போட்டியில்  சென்னை மற்றும் பெங்களூர் அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் தோனி, பெங்களூர் அணியை பேட்டிங் செய்ய அழைத்தார். இதையடுத்து  பெங்களூர் அணியின் கேப்டன் விராட் கோலியும், பார்த்திவ் பட்டேலும் களமிறங்கியுள்ளனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் விராட் கோலி 12 பந்தில் 6 ரன்கள் எடுத்து ஹர்பஜன் சிங் பந்தில் ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய மெயின் அலியும் ஹர்பஜன் சிங் பந்தில் 8 பந்துகளில் 9 ரன் எடுத்து ஆட்டமிழந்துள்ளார். தற்போது பெங்களூர் அணி 5.3 ஓவரில் 31 ரன்களுக்கு 2 விக்கெட் இழந்துள்ளது . டிவிலியர்ஸ் மற்றும் பார்த்திவ் பட்டேல் களத்தில் உள்ளனர்.