“ஐபிஎல்ல யாரு படம் ஓடுனாலும் நாங்க தான் அங்க ஹீரோ” ஹர்பஜன் மாஸ் ட்விட்..!!

ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி வெற்றி பெற்றதையடுத்து ஹர்பஜன்சிங் தமிழ் ட்விட் செய்து அசத்தியுள்ளார்.  

ஐ.பி.எல்லில் நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும்  சென்னை சேப்பாக்கத்தில் உள்ள சிதம்பரம் மைதானத்தில் மோதியது. இதில் டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் தோனி பீல்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய ஹைதராபாத் அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழந்து 175 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக மனிஷ் பாண்டே 83 (49) ரன்களும், வார்னர் 57 (45) ரன்களும் குவித்தனர்.

Image

இதையடுத்து களமிறங்கிய சென்னை அணி  19.5 ஓவரில் 176 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அதிகபட்சமாக  அதிரடியாக விளையாடிய  சேன் வாட்சன்   53 பந்துகளில் 96 ரன்கள் (6 சிக்ஸர், 9 பவுண்டரி) குவித்து வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தார். மேலும் ரெய்னா  38 (24) ரன்களும் குவித்தார்.

Image

ஹர்பஜன் சிங்  சென்னை அணியின் ஒவ்வொரு போட்டிக்கு பிறகும் தமிழ் ட்விட் செய்து வருவது ரசிகர்கள் அனைவருக்கும் தெரியும். இந்நிலையில் நேற்று  சென்னை அணி வெற்றி பெற்றது குறித்து ஹர்பஜன் சிங் தமிழ் ட்விட் செய்துள்ளார். அதில் ஐபில்ல கிடைக்குற கோப்பைக்கு கௌரவம் இருக்கு அத எடுக்கிற கைகளுக்கு பின்னால சரித்திரம் உண்டு. ஆனா அந்த கோப்பையை அடிக்கறதுக்கு ஏற்கனவே சி எஸ்கே னு ஒரு டீம் இன்னைக்கு பி ஃளே ஆப்ல கால் பதிச்சுட்டாங்கனு தெரிய படுத்த வேண்டிய நேரம். ஐபிஎல் ல யாரு படம் ஓடுனாலும் நாங்க தான் அங்க ஹீரோ என்று பதிவிட்டிருந்தார்.