“சச்சின் மனம் தொட்ட புகைப்படங்கள்” கலைஞருக்கு வாழ்த்து…!!

முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் தனது மனதுக்கு பிடித்த புகைப்படங்களை பதிவிட்டு புகைப்பட கலைஞருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். 

பிரான்ஸ் நாட்டின் லூயிஸ் டாகுவேரே என்பவர் ‘டாகுரியோடைப்’ எனப்படும் புகைப்படத்தின் செயல்பாட்டு முறையை வடிவமைத்த நாள் ஆகஸ்ட் 19  ஆகும். ஆகவே அந்த நாளை (ஆகஸ்ட் 19) உலக புகைப்பட தினமாக பிரான்ஸ் அரசு அதிகாரபூர்வமாக அறிவித்தது. இதையடுத்து உலகம் முழுவதும் புகைப்படங்களின் சிறப்பையும், புகைப்பட கலைஞர்களின் திறமையும் கொண்டாடும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் உலக புகைப்பட நாள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அதனபடி ஒவொருவரும் தங்களது சிறந்த புகைப்படங்களை பதிவிட்டு கொண்டாடி வருகின்றனர்.

Image result for sachin

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்பட கலைஞர்களை வாழ்த்தி பதிவிட்டுள்ளார். அதில் பல ஆண்டுகளாக எனது புகைப்படங்களைக் கிளிக் செய்து, என் வாழ்க்கையிலும், எனது வாழ்க்கையிலும் மிகவும் பொக்கிஷமான தருணங்களைப் பிடிக்க உதவிய அனைத்து புகைப்படக் கலைஞர்களுக்கும் உலக புகைப்பட தின வாழ்த்துக்கள் என்று தெரிவித்து, தனக்கு பிடித்த புகைப்படங்களை தொகுப்பாக இணைத்து ஒரே புகைப்படமாக பதிவிட்டுள்ளார். அவரது இந்த புகைப்பட பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.